பாகிஸ்தானில் அடையாளம் தெரியாதவர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீஸார் பலி

பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 போலீஸார் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை பக்துன்க்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் மற்றும் பன்னு மாவட்டங்களில் இந்த சம்பவங்கள் நடந்தன.

லக்கி மார்வாட் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சராய் நௌராங் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பணியில் இருந்த மூன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவத்தில், மந்தன் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தங்கள் பணியாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாக பன்னு காவல் துறை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட காவலர், வீட்டிலிருந்து மந்தன் காவல் நிலையத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஆயுதமேந்திய நபர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதில் அவர் பலியானதாகவும் அவர்கள் கூறினர்.

Summary

At least four police personnel were killed by unknown gunmen in two separate firing incidents in Khyber Pakhtunkhwa province in northwestern Pakistan, officials said on Sunday.

கோப்புப்படம்
திருச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com