வெனிசுவேலா மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வாழ்த்து!

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வாழ்த்து தெரிவித்தது குறித்து...
டிரம்ப்புக்கு எதிராக நெதர்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில்...
டிரம்ப்புக்கு எதிராக நெதர்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில்...படம் - ஏபி
Updated on
1 min read

வெனிசுவேலா நாட்டின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது வலுவான ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரத்திற்காகவும், அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிராகவும் போராடும் ஈரானிய மக்களுக்கு இஸ்ரேல் துணை நிற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் மற்றும் நீதிக்காக தங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள் என்றும் தங்கள் தீர்க்கமான மன உறுதியையும், துணிச்சலான வீரர்களின் அர்ப்பணிப்பையும் தலைவணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதையும், உலகெங்கிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் இஸ்ரேல் என்றும் உறுதியுடன் இருப்பதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் மீது நேற்று (ஜன. 3) நள்ளிரவு திடீர் தாக்குதலைத் தொடர்ந்துள்ளார்.

வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்தார்.

எனினும், மதுரோ மற்றும் அவரின் மனைவி உயிருடன் இருப்பதை வெனிசுவேலா அறிய விரும்புவதாக துணை அதிபர் அறிவித்திருந்தார். இதன் பிறகு, மதுரோ கைது செய்யப்பட்டு கண்கள், காதுகள் மூடியவாறு அழைத்துச்செல்லப்படும் புகைப்படத்தையும் டிரம்ப் பகிர்ந்திருந்தார். இதன் பிறகே மதுரோ உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவை கடத்திச்செல்லப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர் மதுரோவையும் அவரின் மனைவியையும் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிரம்ப்புக்கு எதிராக நெதர்லாந்தில் நடைபெற்ற போராட்டத்தில்...
வெனிசுவேலா அதிபர் சிறைப்பிடிப்பு இந்தியாவை பாதிக்குமா? முன்னாள் இந்தியத் தூதர் விளக்கம்
Summary

Venezuela-US tensions Israel's Netanyahu congratulates Trump on Venezuela strike

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com