என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: மதுரோவின் மகன் அவையில் உருக்கம்!

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மத்தியில் நிகோலஸ் மதுரோவின் மகன் உருக்கமாகப் பேசியது குறித்து...
Nicolas Maduro son Guerra
நிகோலஸ் மதுரோ குய்ர்ரா படம் - எக்ஸ்
Updated on
1 min read

அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவரின் மகன் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா.

இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதாகவும் வெனிசுவேலாவின் தலைமைக்கு வலுசேர்க்கும் வகையில் உறுதுணையாக இருப்பேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பொறுப்பேற்ற பிறகு கூடிய பேரவையில் நிகோலஸ் மதுரோ குய்ர்ரா உரையாற்றினார். இடைக்கால அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குறிப்பிட்டு உறுதி மொழி எடுத்துகொண்டார்.

பின்னர் தனது தந்தை நாடு கடத்தப்பட்டுள்ளது குறித்து அவர் பேசியதாவது,

''தந்தையே, உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் வலிமையுடையவர்களாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள். நீங்கள் திரும்பும் வரை நாட்டு மக்களுக்கான கடமைகளைச் செய்வோம்.

நம் தாய் நிலம் மேன்மையான மக்களின் கையில்தான் உள்ளது தந்தையே. வெனிசுவேலா நிலத்தில் நான் விரைவில் உங்களை கட்டியணைப்பேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

என் தாய் சிலியாவும் என்னை விரைவில் தாய் நிலத்தில் சந்திப்பார். தாய் நிலத்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்வீர்கள். தாய் நாட்டிற்கு என்ன வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். நீங்கள் என்றுமே வெனிசுவேலாவின் தலைவர்தான்'' எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிகோலஸ் மதுரை நியூ யார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அதே நாளில், குய்ர்ரா இவ்வாறு பேரவையில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nicolas Maduro son Guerra
50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!
Summary

Nicolas Maduro son Guerra at the legislature emotional speech Venezuela

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com