

உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார்.
உகாண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.
சுமாா் 4.5 கோடி மக்கள்தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் மட்டுமே வாக்களித்தனர்.
1986-ல் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, யோவேரி முசேவேனி அதிபராகப் பதவியேற்றார். நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளுங்கட்சியான முசேவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கக் கட்சி, வயது மற்றும் பதவிக்கால வரம்புகளை நீக்க அரசியலமைப்பை பல முறை மாற்றியதன் மூலம் முசேவேனியின் பதவியும் தக்கவைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.