16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான்!

அமேசான் நிறுவனம் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல்...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆவது முறையாக மிகப் பெரியளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமேசானின் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பெத் கலேட்டி கூறுகையில்,

“நாங்கள் அமேசான் முழுவதும் கூடுதல் அமைப்புசார் மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதனால், எங்கள் சக ஊழியர்கள் சிலர் பாதிப்படைவார்கள்.

இன்று நாங்கள் மேற்கொள்ளும் பணிக்குறைப்புகளால் அமேசான் முழுவதும் சுமார் 16,000 பேர் பாதிக்கப்படுவார்கள். இதனால், அவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, சுமார் 14,000 பதவிகளைக் குறைக்கவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இந்த மிகப் பெரியளவிலான பணி நீக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்புப் படம்
இஸ்ரேலின் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
Summary

Amazon is planning to lay off approximately 16,000 employees worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com