விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

ஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்

கடந்த 3 நாள்களாக ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஏபி

Updated On :1 ஜூலை 2026, 7:57 pm IST

ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.

கடந்த மூன்று இரவுகளாக ஈரானை கடுமையாக அமெரிக்கா தாக்கி வருகிறது. இந்தபோதிலும் நாங்கள் இப்போது நன்றாகப் பழகி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

கத்தார் வழங்கிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் வடக்கு தோஹாவுக்கு அதிபர் டிரம்ப் இன்று பயணம் மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களுடன் ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய அவர்,

''ஈரானில் அணு ஆயுத நீக்க நடவடிக்கை நேர்மறையாக நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தாலும், அந்நாட்டுனான உறவு சுமூகமாகவே உள்ளது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையும் முன்னேற்றப்பாதையில் உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே முன்பு இருந்த பதற்றமான சூழல் தற்போது இல்லை என்றும் அணு ஆயுதங்களற்ற ஈரானை உருவாக்கும் முயற்சியே தற்போதைய குறிக்கோளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கத்தாரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பில் இருந்தும் சுமூகமான இடத்தை நோக்கி நகரும்படியான கோரிக்கைகளை முன்வைத்தாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இரு தரப்பினருக்கும் இடையே இதற்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குப் பிறகு, தெஹ்ரானுடனான உறவுகளைக் கையாள்வதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, மறைமுக மற்றும் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.

Summary

denuclearisation of Iran is going well US President Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.