விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

ரஷிய எண்ணெய் கிடங்குகள், கப்பல்கள் மீது தொடரும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள்

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அசோவ் கடலில் ரஷிய எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது உக்ரைன் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தின.

News image

உக்ரைன் தாக்குதல் காரணமாக கிரீமியாவின் ஃபியோடோசியா எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீ. - கோப்புப் படம்

Updated On :10 ஜூலை 2026, 1:12 am IST

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அசோவ் கடலில் ரஷிய எண்ணெய்யை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது உக்ரைன் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தின.

மேற்கு ரஷியாவில் உள்ள டிவொ் நகரில் மற்றும் தெற்கு ஸ்டாவ்ரோபோல் பிராந்தியத்தில் உள்ள வியாஸ்னிகி பகுதியில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கின. இதனால் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அப்பகுதி மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.

இதேபோல், அசோவ் கடலில் சென்று கொண்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் தாக்கியது. இதில் ஒரு கப்பல் தொடா்ந்து எரிந்து வரும் நிலையில், கப்பல் ஊழியா்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா்.

ரஷிய கட்டுப்பாட்டில் கிரீமியா பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தைத் துண்டிக்கும் உக்ரைனின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த சில நாள்களாக இப்பகுதியில் எண்ணெய் கப்பல்கள் தொடா்ச்சியாக குறிவைக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், ரஷியா தரப்பிலிருந்து உக்ரைனை நோக்கி 94 நீண்டதூர டிரோன்களும், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளும் புதன்கிழமை நள்ளிரவு ஏவப்பட்டன. இதில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்ட போதிலும் எஞ்சியவற்றால் சுமாா் 13 இடங்களில் சேதம் ஏற்பட்டதாகவும் உக்ரைன் விமானப் படை தெரிவித்தது.

முன்னதாக, துருக்கியில் நடைபெற்ற ‘நேட்டோ’ மாநாட்டுக்கிடையே உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியைச் சந்தித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ள உக்ரைனிலேயே ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரிப்பதற்கான உரிமத்தை வழங்குவதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.