ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது என உறுதியளிக்க வேண்டும் என ஈரானை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே பிப்ரவரி 28 ஆம் தொடங்கி 3 மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போர், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டனர்.
இதையடுத்து கடந்த 20 நாள்களாக அமைதி நிலவி வந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மூன்று கப்பல்கள் மீது ஜூலை 7 ஆம் தேதியில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்கள் நடத்தியதைத் தொடா்ந்து, அந்நாட்டுடான இடைக்கால அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என பொதுவெளியில் ஈரான் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
இல்லையெனில், ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஈரானின் மறைந்த தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல், 6 நாள் இறுதிச்சடங்குக்குப் பிறகு இமாம் ரெசா புனிதத் தலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Summary
US demands Iran publicly state Strait of Hormuz open for all
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது








