நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

ரஷியா, சீனாவுடன் ஆலோசனை; ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!

ரஷியா மற்றும் சீனா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்ச்சி அறிவிப்பு...

News image

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி - படம் | ஈரான் துதரகம்

Updated On :24 ஜூலை 2026, 9:28 pm IST

அமெரிக்காவின் அச்சுறுத்தல் மொழிகளை ஈரான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் அச்சுறுத்தல் மொழிகளை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், அமெரிக்காவுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் அராக்ச்சி கூறியதாவது:

“ரஷியா மற்றும் சீனா உடனான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நாங்கள் சீனா மற்றும் ரஷியாவில் உள்ள எங்களின் நண்பர்கள் உடன் ஆலோசனைகளை நடத்துகிறோம்.

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் நலன்களைப் பாதுகாப்பது எங்களின் கொள்கைகளில் ஒன்று. அவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஈரானிய மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்களின் நடவடிக்கைகள் தொடர்வது இயல்புதான்” எனக் கூறியுள்ளார்.

Summary

Iranian Minister Araghchi has stated that Iran will never tolerate America's threatening language.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.