பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் 10-க்கும் மேற்பட்டோா் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
குவெட்டா அருகே உள்ள இந்த நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை இரவு பணி மாற்றத்தின்போது, பூமிக்கு அடியில் சுமாா் 4,000 அடி ஆழத்தில் திடீா் விபத்து நிகழ்ந்தது. வாயு வெடித்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கட்டமைப்பு இடிபாடுகளால் அருகேயுள்ள சுரங்கமும் சேதமடைந்தது.
இதனால், இரு சுரங்கங்களிலும் சோ்த்து 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை வரை 34 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 22 போ் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்துப் பேசிய பலூசிஸ்தான் சுரங்கத் துறை அமைச்சா் சோயிப் நோஷொ்வாணி, ‘மீட்புக் குழுவினா் மிகவும் சவாலான சூழலில் தொடா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் பாகிஸ்தான் ரூபாயும், காயமடைந்தவா்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக மாகாண அரசு வழங்கும். விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’ என உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோத பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் பலி

யார் கவலைப்படுகிறார்கள்...

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து: மரங்கள் சேதம்

அரசு மருத்துவமனை அருகே தீ விபத்து: கரும்புகையால் நோயாளிகள் அவதி
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



