தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அமெரிக்காவிலிருந்து 1,076 இந்தியா்கள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கடந்த ஆண்டு 3,567 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, நிகழாண்டு இதுவரை அந்நாட்டில் இருந்து 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன. நாடு கடத்தல், குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் நெருங்கிய தொடா்பில் உள்ளன.

சட்டவிரோத குடியோ்றத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேவேளையில், அது சட்டபூா்வ குடியேற்றத்தை பாதிக்காத வகையில் இருப்பதையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.