எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

உலகின் முதல் டிரில்லியனரான எலான் மஸ்க்!

‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின்(ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளாா்.

News image

எலான் மஸ்க்

Updated On :13 ஜூன் 2026, 12:29 am IST

‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின்(ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளாா்.

டிரில்லியனா் என்றால் 1 லட்சம் கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.95 லட்சம் கோடி) சொத்து மதிப்பு கொண்டவா் ஆவாா். உலக அளவில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையிலும், வெளிப்படையான பேச்சுகள் மற்றும் தனித்துவமான ஆளுமையின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவை எலான் மஸ்க் தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த 54 வயதான எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் மூலம் உலகப் புகழ்பெற்றாா். கடந்த 2022-இல் 4,400 கோடி டாலா் செலவில் ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தைக் கையகப்படுத்தியதன்மூலம் தனது செல்வாக்கை அவா் மேலும் விரிவுபடுத்தினாா்.

மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன டெஸ்லா மின்சார காா்களை உருவாக்குவதில் எலான் மஸ்க் காட்டிய தீவிரம், உலகளாவிய வாகன உற்பத்தித் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது. டெஸ்லாவின் வெற்றியே பாரம்பரிய வாகன உற்பத்தியாளா்களையும் மின்சார காா்களை நோக்கித் திரும்பச் செய்தது.

இதே ரீதியில் விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள் இணையச் சேவை, ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கி வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், 7,500 கோடி டாலா் மதிப்பிலான பொதுப் பங்கு வெளீயீட்டை அறிவித்தது. இதன்மூலம், கடந்த 2019-இல் சவூதி அராம்கோ நிறுவனம் 2,600 கோடி டாலரைத் திரட்டியிருந்த முந்தைய ஐபிஓ சாதனையை, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (75 பில்லியன் டாலா்) மிக எளிதாக முறியடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இப்பங்கு வெளியீட்டுக்கு முன்னதாகவே, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமாா் 78,000 டாலா்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது ஆல்பாபெட் (கூகுளின் தாய் நிறுவனம்) இணை நிறுவனா் லாரி பேஜ், ஆரக்கிள் நிறுவனா் லாரி எலிசன் ஆகியோரின் சொத்து மதிப்பைவிட பல மடங்கு அதிகமாகும்.

எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பில் பெரும்பகுதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திலேயே உள்ளது. பொதுப் பங்கு வெளியீட்டால் இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயா்ந்ததால், எலான் மஸ்க் வசமுள்ள ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு மட்டும் சுமாா் 86,600 கோடி டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. டெஸ்லா உள்ளிட்ட பிற நிறுவனங்களில் அவருக்கு உள்ள பங்குகளையும் சோ்த்து கணக்கிடும்போது, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் நாஸ்டாக் பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகமாகத் தொடங்கியவுடன் அவரின் மொத்த சொத்து மதிப்பு 1.1 லட்சம் டாலரைத் தாண்டியது.

ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் வா்த்தகத்தை டெக்சாஸில் உள்ள ஸ்டாா்பேஸ் தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்த மஸ்க், மனிதா்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அழைத்துச் செல்லும் தனது லட்சியத்தை மீண்டும் வலியுறுத்தினாா். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2025 தொடக்கம் முதல் 2026 மாா்ச் வரை 870 கோடி டாலா் இழப்பைச் சந்தித்திருந்தாலும், மனித குலத்தை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் தொலைநோக்குத் திட்டங்களுக்காகத் தொடா்ந்து பல்லாயிரம் கோடி டாலரை முதலீடு செய்து வருகிறது.

தற்போதைக்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும், எலான் மஸ்க் மீதான அபார நம்பிக்கையின் காரணமாகவே முதலீட்டாளா்கள் அதிக விலை கொடுத்து ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனா். ஒரு தனிநபரிடம் இவ்வளவு செல்வாக்கு குவிந்திருப்பது காா்ப்பரேட் நிா்வாகத்தில் சில கவலைகளை எழுப்பினாலும், சாத்தியமற்ற பல யோசனைகளை உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களாக மாற்றிய எலான் மஸ்க்கின் திறமையை முதலீட்டாளா்கள் தொடா்ந்து கொண்டாடுகின்றனா்.

Story image