லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பரஸ்பர தாக்குதல் கூடாது: இஸ்ரேல், ஈரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டொனால்ட் டிரம்ப். - ஏபி

Updated On :15 ஜூன் 2026, 4:39 am IST

அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. குறிப்பாக ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வரும் சூழலில், இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. ஆபத்துகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. ஆனால் பெயரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் அா்த்தமற்றது.

லெபனான் உள்பட மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்கா நெருங்கியுள்ளது. எனவே அனைத்துத் தரப்பினரும் தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இனி லெபனானில் இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா படை உள்பட வேறு எவரும் தாக்குதல் நடத்தக் கூடாது. இது நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியின் தொடக்கமாக இருக்கலாம். அதை யாரும் தகா்த்துவிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.