விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நாம் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான ஜோடி! ஜி7 மாநாட்டில் மோடியிடம் மெலோனி கூறியது வைரல்!!

நாம்தான் இன்ஸ்டாவில் மிகப் பிரபலமான ஜோடி என ஜி7 மாநாட்டில் மோடியிடம் மெலோனி கூறிய விடியோ வைரல்.

News image

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் ​​இத்தாலியப் பிரதமர் ஜாா்ஜியா மெலோனி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :17 ஜூன் 2026, 11:55 am IST

பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகப் பிரபலமான ஜோடி என்று இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறிய விடியோ வைரலாகியிருக்கிறது.

கடந்த மாதம் இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தான் இந்தியாவிலிருந்து உங்களுக்கு பரிசொன்று வாங்கிவந்திருக்கிறேன் என்று கூறி, மெலோனிக்கு மெலோடி சாக்லெட் கொடுத்த விடியோ வைரலாகியிருந்த நிலையில், இன்றைய விடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பல நாட்டுத் தலைவர்களும் குழு புகைப்படம் எடுக்க ஒன்றாக அணிவகுத்தபோது, மெலோனியும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் சந்தித்து கைக்குலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அப்போது அங்கே பதிவான விடியோவில் குரல் பதிவு சரியாக கேட்கவில்லை. பிரதமர் மோடி, சமூக வலைத்தளத்தில் நாம் இருவரும் அதிகம் பேசப்படுகிறோம் என்பது போன்ற கருத்தை அவர் கூற, அதனைக் கேட்ட இத்தாலி பிரதமர், ஆமாம், நாம்தான் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான ஜோடி என்று கூறி சிரிப்பது பதிவாகியிருக்கிறது.

ஏவியான் நகரில் ஜி7 நாடுகளின் வருடாந்திர உச்சிமாநாடு, கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச சவால்கள், பொருளாதார சிக்கல்கள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து நேற்று தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், ஜி7 மாநாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்கக் கூடியபோது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி - பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தாலி பிரதமர் மெலோனி - பிரதமர் மோடியின் பெயர்களை ஒன்றிணைத்தால் மெலோடி என்று வரும். இது குறித்து கடந்த 2023ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைகள் பகிரப்பட்ட நிலையில் அது பிரபலமடைந்தது. அதுமுதல் இரு தலைவர்களும் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் விடியோக்கள் அதிக பார்வைகளை பெற்று வந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு மெலோனி, தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் ஒருசெல்ஃபி எடுத்து அதனை இனிய நண்பர்களே, நாங்கள் மெலோடி என்று பதிவிட்டிருந்தார்.

பிறகு, 2025ஆம் ஆண்டு ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட விடியோவைப் பகிர்ந்து ஹல்லோ, மெலோடி குழுவிலிருந்து என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த மாதமும் மெலோடி சாக்லேட் குறித்த விடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து தனிக்கவனம் ஈர்த்தது

உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமா் மோடி பங்கேற்றுள்ளாா். இதையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் அவர் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

We are the famous couple on Insta Video of Meloni to Modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.