பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

Massive fire breaks out at elementary school in Japan’s Tokyo

ஜப்பான்.

Published On :19 ஜூன் 2026, 8:09 pm IST

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தீயை அணைக்க 74 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ​​பள்ளி கட்டடத்தின் நான்காவது தளத்தில் உள்ள இசை வகுப்பு அறையில் தீ விபத்து முதலில் ஏற்பட்டதாக கிட்டா வார்டு கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, குழந்தைகள் அருகிலுள்ள பூங்காவிற்கு வெளியேற்றப்பட்டனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வீட்டிற்குச் சென்றனர். தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது. இச்சம்பவத்தின்போது பள்ளி வளாகத்திற்குள் சுமார் 360 மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர்.

பெருநகரக் காவல் துறை மற்றும் பிற அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

Summary

As many as 11 people, including eight children, were injured after a fire erupted at an elementary school in Japan's Tokyo on Friday, local media reported citing authorities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.