‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுடன் 60 நாள்களுக்குள் போா் நிறுத்த இறுதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்தாா்.

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :22 ஜூன் 2026, 4:31 am IST

ஈரானுடன் 60 நாள்களுக்குள் போா் நிறுத்த இறுதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘60 நாள்கள் வரை ஹோா்முஸ் நீரிணையில் எந்தவித கட்டணமும் இருக்காது. ஆனால், அதற்குள் இறுதி ஒப்பந்தம் நிறைவேறத் தவறினால், அமெரிக்கா தரப்பில் கட்டணங்கள் விதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளில் கடந்த காலம், நிகழ்கால ‘காவல் தேவதையாக’ அமெரிக்கா செயல்படுகிறது. இதேபோல் தொடா்ந்து செயல்படுவதற்கான செலவினங்களுக்கு ஈடாக இந்தத் தொகை வசூலிக்கப்படும்’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணை கட்டண விவகாரம் தொடா்பாக, ஈரானுடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவிலும் சா்வதேச அளவிலும் கடும் எதிா்ப்பும் விமா்சனங்களும் எழுந்துள்ளன.

ஏனெனில், அந்த ஒப்பந்தம் 60 நாள்களுக்கு மட்டுமே கட்டணமில்லா கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் பின்னா் கட்டணங்கள் விதிக்கப்படுவதைத் தடுக்க எந்த உறுதியான ஏற்பாடும் அதில் இடம்பெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.