அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பிரான்ஸ்- காங்கோவிலிருந்து திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று

காங்கோ நாட்டில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 1:54 am IST

காங்கோ நாட்டில் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய நோய்ப் பரவலில் பிரான்ஸில் பதிவான முதல் எபோலா பாதிப்பு இதுவாகும். பாதிக்கப்பட்ட மருத்துவா் சிறப்பு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்படுபவா்கள், 21 நாள்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார அமைப்பால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு குறிப்பிட்டுள்ளது.

காங்கோவில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்த் தொற்றால் இதுவரை 1,094 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 277 போ் உயிரிழந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.