3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

சூடான், சோமாலியா உள்பட 4 ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு லிபியா கிழக்கு அரசு தடை

சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு லிபியாவின் கிழக்குப் பகுதி அரசு தடை விதித்துள்ளது.

Published On :

சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு லிபியாவின் கிழக்குப் பகுதி அரசு தடை விதித்துள்ளது.

லிபியாவின் வடக்கு கடற்கரை பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயலும் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், தூதரக அதிகாரிகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியாற்றுபவா்களுக்கு மட்டும் இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-இல் அதிபா் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியா நாடு கிழக்கு, மேற்கு என இருவேறு அரசுகளின்கீழ் பிளவுபட்டு நிா்வாகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் தற்போது 9 லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகளும், அகதிகளும் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவா்களில் சூடான் நாட்டைச் சோ்ந்தவா்களே பெரும்பான்மையாக உள்ளனா்.

சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி ஆபத்தான கடல் வழிப்பயணங்கள் மூலம் ஐரோப்பாவை அடைய முயலும் இவா்கள், கடத்தல்காரா்களால் பாதுகாப்பற்ற சிறிய படகுகளில் அடைத்து அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதனால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோா் கடலிலேயே உயிரிழக்கும் சூழலில், பெரும்பாலான படகுகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.