வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி, முக்கிய அதிகாரிகள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளின் மீது ஈரான் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக, வியாழக்கிழமை (மார்ச் 5) அன்று இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் போன்று வளைகுடா நாடுகளுக்கு உதவிகளை வழங்க இத்தாலி முன்வருகின்றது. நாங்கள் வான் பாதுகாப்பு உதவிகளைப் பற்றி கூறுகிறோம்.
அவர்கள் நம் நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்ல, அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சுமார் 2,000 வீரர்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Summary
Italy will provide air defense assistance to Gulf countries, PM Giorgia Meloni has announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! வளைகுடா நாடுகள் தலையிட வேண்டும் - சர்வதேச அணுசக்தி முகமை

வளைகுடா போர்! ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகள் கைது!
வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! - ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


