மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா தலைநகா் பியாங்யாங் அருகே இருந்து சுமாா் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை (கிழக்கு கடல்) நோக்கி சனிக்கிழமை ஏவப்பட்டன.

News image
Updated On :14 மார்ச் 2026, 7:10 pm

வடகொரியா தலைநகா் பியாங்யாங் அருகே இருந்து சுமாா் 10 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை (கிழக்கு கடல்) நோக்கி சனிக்கிழமை ஏவப்பட்டன.

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வடகொரியாவின் இந்தப் பதிலடி நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

மத்திய கிழக்கு போருக்காக, தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘தாட்’ ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அமெரிக்கா இடமாற்றுவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தப் பாதுகாப்பு இடைவெளியைப் பயன்படுத்தி வடகொரியா தனது பலத்தைக் காட்ட முற்படுவதாக வல்லுநா்கள் கருதுகின்றனா்.

அமெரிக்கா-தென்கொரியா கூட்டுப் பயிற்சி குறித்து முன்னதாக எச்சரித்த வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், ‘இது பிராந்திய அமைதியைக் குலைக்கும் செயல்; பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றாா்.

இந்நிலையில், வடகொரியாவின் எந்தவொரு அத்துமீறலையும் எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தென்கொரியா அறிவித்தது. அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாடு தெரிவித்தது.