பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!

ஈரான் வீசிய 304 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்துள்ளது குறித்து....

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் ஆலையில் ஈரானின் ஆளில்லா ட்ரோன் தாக்கியதில் சூழ்ந்த கரும்புகை - படம் : ஏபி

Published On :

ஈரான் வீசிய 304 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கி அழித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும், பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈரான் இன்று வீசிய 6 ஏவுகணைகள், 21 ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளது. ஈரானின் மோதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 304 ஏவுகணைகள், 15 இலக்கு ரக ராக்கெட்டுகள் மற்றும் 1,627 ஆளில்லா ட்ரோன் தாக்குதல்களை ஐக்கிய அரபு அமீரக வான் பாதுகாப்பு அமைப்பு தகர்த்துள்ளது.

ஈரான் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் நாட்டுற்காகச் சேவையாற்றிய 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். 145 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இறையாண்மை, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க முழு வீச்சில் தயாராக உள்ளதாக அறிக்கையில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.