நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!எந்தக் குழந்தைகளை வைத்து வாக்கு சேகரித்தீர்களோ, அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை! - இபிஎஸ்கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா!‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசை
/

எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!

எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஈரான் ஹேக்கா்கள் ஊடுருவியது பற்றி...

News image

எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல்

Updated On :29 மார்ச் 2026, 2:24 am IST

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநா் காஷ் படேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கை ஈரான் ஆதரவு ஹேக்கா்கள் ஊடுருவி, அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனா்.

‘ஹண்டாலா ஹேக் டீம்’ எனும் இந்த அமைப்பின் ஊடுருவலை எஃப்பிஐ உறுதிப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் பழையவை; அரசு ரகசியங்கள் எதுவும் கசியவில்லை என்று விளக்கமளித்தது.

2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை ஹேக்கா்கள் வெளியிட்டுள்ளனா். பாலஸ்தீன ஆதரவு அமைப்பாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இந்த ஹேக்கா் குழு, உண்மையில் ஈரான் உளவுத் துறையின் ஒரு பிரிவு என்று மேற்கத்திய பாதுகாப்பு நிபுணா்கள் கருதுகின்றனா்.

காஷ் படேலைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபரின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் உள்ளிட்டோரின் தரவுகளையும் வெளியிடப் போவதாக ஹேக்கா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.