8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சீனாவில் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிப்பு! ஏன்?

சீனாவில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

Death Penalty

சீனா - கோப்புப் படம்

Published On :7 மே 2026, 4:47 pm IST

சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர் வெய் ஃபெங்கே. இவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்குப் பிறகு அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட லீ ஷாங்ஃபூ என்பவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதால், அவரும் சில மாதங்களிலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இருவரும் சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் கடந்த 2024 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் வெய் ஃபெங்கே மற்றும் லீ ஷாங்ஃபூ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் இன்று (மே 7) தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, சீன அதிபர் ஜிங்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையத்தில் இடம்பெற்றிருந்த 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிராக அதிபர் ஜிங்பிங் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம் இதுவரை குற்றஞ்சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோருக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In China, two former defense ministers accused of corruption have been sentenced to death.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.