ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா விடுவிப்பு

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் விடுவிப்பு

News image

தக்சின் ஷினவத்ரா - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 5:04 am IST

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76), ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

2006-இல் ஆட்சியிழந்த பின்னா் வெளிநாட்டில் தஞ்சமடைந்த இவா், கடந்த 2023-இல் நாடு திரும்பினாா். முதலில், இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னா், அரசரின் கருணை அடிப்படையில் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது நன்னடத்தை, வயது மூப்பு காரணமாக பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

தக்சின் ஷினவத்ரா விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறைவளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளா்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.