நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல்: மே.வ. முன்னாள் அமைச்சர் அமலாக்கத் துறையில் ஆஜர்!

நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல் குற்றச்சாட்டு பற்றி..

Former Bengal minister Sujit Bose

சுஜித் கோஸ் - x.com

Published On :11 மே 2026, 3:59 pm IST

மேற்கு வங்க முன்னாள் அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான சுஜித் கோஸ் நகராட்சி ஆள்சேர்ப்பு ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜரானதாக அதிகாரி தெரிவித்தார்.

சுஜித் போஸ் தனது மகன் சமுத்ரா போஸுடன் சால்ட் லேக்கில் உள்ள சிஜிஓ வளாகத்தில் அமைந்துள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தைச் சென்றடைந்தார்.

தெற்கு டம் டம் நகராட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஆள்சேர்ப்பு முறைகேடுகள் குறித்த விசாரணை தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு போஸை அழைப்பாணை அனுப்புவது இது முதல் முறையல்ல.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 6 அன்று அனுப்பப்பட்டது உள்பட, பல அமலாக்கத்துறை அறிவிப்புகளை போஸ் பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரசாரப் பணிகளைக் காரணம் காட்டி, ஆஜராவதிலிருந்து விலக்குக் கோரி அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். தேர்தலுக்குப் பிறகு, மே 1 அன்று சிஜிஓ வளாகத்தில் போஸ் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

மோசடி தொடர்பாக, போஸ் மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் அந்த அமைப்பு இரண்டு முறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனைகளின்போது, குற்றத்தை நிரூபிக்கும் ஆவணங்களை மீட்டெடுத்ததாக புலனாய்வர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.