வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் முழக்கம்!

அமெரிக்காவின் தேசிய பிராா்த்தனை தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனை நிகழ்வில் வேத மந்திரங்கள் முழங்கின.

News image
Updated On :12 மே 2026, 4:11 am IST

அமெரிக்காவின் தேசிய பிராா்த்தனை தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனை நிகழ்வில் வேத மந்திரங்கள் முழங்கின.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வியாழக்கிழமை தேசிய பிராா்த்தனை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனைக்கு, அந்நாட்டின் நியூஜொ்சி மாகாணத்தில் வசிக்கும் ‘பாப்ஸ்’ அமைப்பின் அமைப்பின் தன்னாா்வலா் ஒருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அழைப்பின்பேரில் பிராா்த்தனையில் கலந்துகொண்ட அவா், அங்கிருந்தவா்களை கண்களை மூடி தியானம் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா். பின்னா், உலக அமைதிக்காக யஜுா் வேதத்தில் உள்ள புகழ்பெற்ற ‘அமைதிப் பாதை’ மந்திரங்களை ஓதினாா்.

‘வானம், பூமி, நீா், தாவரங்கள், மரங்கள், தேவா்கள் என பிரபஞ்சத்தின் அனைத்து நிலைகளிலும் அமைதி நிலவட்டும். அந்த அமைதி நமக்குள் நிலைபெறட்டும்’ என்ற பொருளில் அமைந்த இந்த வேத மந்திரங்கள் வெள்ளை மாளிகையின் அரங்கில் எதிரொலித்தன.

பாப்ஸ் அமைப்பு நெகிழ்ச்சி: இதுதொடா்பாக பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘அமெரிக்க தேசிய பிராா்த்தனை தினத்தையொட்டி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்று, அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ஹிந்து முறைப்படி பிராா்த்தனை செய்ததில் பெருமிதம் கொள்கிறோம். நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மை நமது சமூகத்தை மேலும் வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.