உக்ரைன் படைகள் ரஷிய எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ. உள்நாட்டில் அமைந்துள்ள தொலைதூர இலக்கைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார். ரஷியாவில் அமைந்துள்ள ‘சிஸ்ரான்’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை (மே 20) நள்ளிரவில் நடத்தியது.
இது குறித்து, ரஷியாவின் சமாரா பிராந்திய ஆளுநர் யாசேஸ்லாவ் ஃபெடோரிச்சேவ் கூறுகையில், சிஸ்ரான் பகுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியானதாக தெரிவித்தார். ஆனால், உக்ரைனின் கூற்றுப்படி எண்ணெய் ஆலையில் தாக்குதல் நடந்ததா என்பதைப் பற்றி அவர் உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில், முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ‘ராஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிஸ்ரான் சுத்திகரிப்பு ஆலையில் உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் உக்ரைன் - ரஷியா இடையேயான தொடர் சண்டையில், ரஷியாவில் தொலை தூர இலக்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களை விரிவாக்கம் செய்துள்ளது. இதற்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை உக்ரைன் பயன்படுத்தி வருகிறது.
சுமார் 4 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரில் ஆரம்பகால கட்டத்தில் நேட்டோ நாடுகளின் ராணுவ உதவியை பெருமளவில் சார்ந்திருந்த உக்ரைனிடமிருந்து இப்போது பிற நாடுகள் ராணுவ தொழில்நுட்ப உதவியை நாடும் நிலைக்கு உக்ரைன் வளர்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Ukrainian drones smashed into another Russian refinery overnight, starting a fire that produced huge clouds of black smoke, President Volodymyr Zelenskyy said Thursday. The drones targeted the Syzran oil refinery, located more than 800 kilometres (500 miles) inside Russia
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்: ஈரான் மீது சந்தேகம்

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


