உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

நேபாளத்தில் சிக்கிய 6 இந்திய சுற்றுலாப் பயணிகள்: ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை!

நேபாளத்தில் பனிப்பொழிவுக்கு இடையே சிக்கிக்கொண்ட 6 இந்திய சுற்றுலாப் பயணிகள் பற்றி.....

Six Indian tourists stranded in Nepal's Dolpa district amid heavy snowfall, rescue underway

நேபாளம்.

Updated On :

நேபாளத்தில் பனிப்பொழிவுக்கு இடையே சிக்கிக்கொண்ட 6 இந்திய சுற்றுலாப் பயணிகளை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஷே-போக்சுண்டோ தேசியப் பூங்கா பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்பதற்காகப் பாதுகாப்புப் படையினரும், ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

டோல்பா மாவட்டத்தில் உள்ள ஷே-போக்சுண்டோ கிராமப்புற நகராட்சியின் 8-வது வார்டில் உள்ள தோ பகுதிக்கு இந்தச் சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை அதிகாரி ஜுனு தகால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ள இடத்தைக் கண்டறிந்துவிட்டதாகவும், அவர்களை மீட்டு அழைத்து வர ராணுவ ஹெலிகாப்டருக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அதிகாரிகளின் தகவல்படி, பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் இருந்த நேபாள வழிகாட்டியும் எச்சரித்திருந்த போதிலும், அந்தச் சுற்றுலாப் பயணிகள் ஏரியை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்துள்ளனர். அவர்கள் வழிகாட்டியைப் பின்னால் விட்டுச் சென்றதாகவும், அதன் பிறகு சனிக்கிழமை இரவு அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சிய வழிகாட்டி, சனிக்கிழமை மாலை மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, அவர்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுவிட்டதால், அவர்களை காணாமல் போனவர்கள் என்று கூற முடியாது என்று ஜுனு தகால் தெளிவுபடுத்தினார்.

Summary

Six Indian tourists, including two women, have been stranded in Nepal's Shey-Phoksundo National Park area since Saturday amid heavy snowfall, with security personnel and an Army helicopter being mobilised for their rescue, officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.