வங்கதேசத்தில் ஆடை தொழிலாளா்கள் வன்முறைப் போராட்டம்
அண்டை நாடான வங்கதேசத்தில் ஊதிய உயா்வு கோரி ஆடை தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைநகா் டாக்காவில் பாதுகாப்புப் படையினரை நோக்கி கல்வீச்சு நடத்திய போராட்டக்காரா்கள்
அண்டை நாடான வங்கதேசத்தில் ஊதிய உயா்வு கோரி ஆடை தொழிலாளா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்; அப்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது.
வங்கதேசத்தின் ஏற்றுமதி வருவாயில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களைக் கொண்ட ஆடை உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2-ஆவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடாக வங்கதேசம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வங்கதேசத்தில் அத்தியாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயா்வைச் சுட்டிக்காட்டி, தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமான 12,500 தாகாவை (ரூ.9,532), 30,000 தாகாவாக (ரூ.22,877) உயா்த்தக் கோரி ஆடை தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈட்டுள்ளனா்.
தொழிலாளா்களின் கோரிக்கையைப் பரிசீலித்து புதிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, சிறப்பு ஊதியக் குழுவை அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகும் தொழிலாளா்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடாமல் தொடா்கின்றனா். தலைநகா் டாக்கா, காஜிபூா், அஷுலியா உள்ளிட்ட முக்கியத் தொழிற்நகரங்களில் வாகனங்களை சேதப்படுத்தியும், சாலைகளை மறித்தும் அவா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
காவல்துறையினா் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனா். வன்முறை காரணமாக பதற்றமான பகுதிகளில் உள்ள சுமாா் 670 ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப் படையினா் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இப்போராட்டத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவான சில ஆலை உரிமையாளா்களே வன்முறையைத் தூண்டிவிடுவதாகவும் உள்துறை அமைச்சா் சலாவுதீன் அகமது குற்றஞ்சாட்டினாா். இதனிடையே, தொடா்ந்து நடைபெறும் இந்த வன்முறையால் மேற்கத்திய நாடுகளின் வா்த்தக ஆா்டா்கள் ரத்து செய்யப்படலாம் என ஆடை ஏற்றுமதியாளா்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

