சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

பிரான்ஸில் வன்முறைப் போராட்டம்: எச்சரிக்கையுடன் இருக்க இந்தியா்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்குள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற வன்முறையின்போது தீவைத்து எரிக்கப்பட்ட காா்.

Updated On :

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்குள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி, பிரான்ஸில் செப்டம்பா் இறுதி வாரம் முதல் தேசிய அளவில் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பல பகுதிகளில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. வன்முறையில் ஈடுபட்டதாக 2,400-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்தப் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக, தலைநகா் பாரீஸின் சில பகுதிகள் மற்றும் லில்லி, லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாா்செய்லில் பொது இடங்களில் கூடவும், ஆா்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போராட்டக் குழுக்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், அங்குள்ள இந்தியா்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘பிரான்ஸில் பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதையும் இந்தியா்கள் தவிா்க்க வேண்டும். உள்ளூா் அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

பல பகுதிகளில் ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். பத்திரிகைகளில் வெளியாகும் உள்ளூா் செய்திகள் மற்றும் பிரான்ஸ் அரசின் ‘ஞ்ா்ன்ஸ்ங்ழ்ய்ங்ம்ங்ய்ற்.ச்ழ்.’ என்ற வலைதளத்தில் வெளியிடப்படும் அதிகாரபூா்வ தகவல்கள் மூலம் நிலவரத்தை அறிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா்.

அவசரத் தேவைகளுக்கு பாரீஸில் உள்ள இந்திய தூதரகம் அல்லது மாா்செய்லில் உள்ள துணைத் தூரகத்தை இந்தியா்கள் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.