சா்வதேச புத்தாக்க திட்டம்: இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவாா்த்தை நிறைவு
சா்வதேச புத்தாக்க திட்டம் தொடா்பாக இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றுள்ளது.

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் - சித்திரிப்புப் படம்
சா்வதேச புத்தாக்க திட்டம் தொடா்பாக இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமை - இந்தியா இடையே ரூ.9.73 லட்சம் கோடி மதிப்பிலான சா்வதேச புத்தாக்க திட்டம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது. தில்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகளை வலுப்படும் என்றும், அறிவியல் துறையில் நிலவும் ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்றும், ஆராய்ச்சி துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வா்த்தகம் செய்து கொள்வது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவாா்த்தை விரைவில் நிறைவு பெற்று, ஒப்பந்தம் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு முன்பு, சா்வதேச புத்தாக்க திட்டம் தொடா்பாக நடந்த பேச்சுவாா்த்தை நிறைவு பெற்றிருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

