இஸ்ரேலின் புதிய பிரதமர் காடி ஐசென்கோட்! ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம்! 2 நாள்களுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...

Magnitude 5.7 earthquake hits central Japan

ஜப்பானில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் - AP

Updated On :

ஜப்பானின் மத்திய மாகாணங்களில் இன்று (நவ. 8) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 40 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 1.04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஐச்சி மாகாணத்தின் கியோட்டோ, நரா நகரங்கள் மற்றும் யமானாஷி மாகாணத்திலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த நிலநடுத்தின் விளைவாக 5.5 ரிக்டர் அளவிலான பின்அதிர்வுகள் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கட்டடங்கள் பயங்கரமான அதிர்வுகளில் சிக்கி அங்குள்ள ஜன்னல்களின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிலநடுக்கம் சார்ந்த பாதிப்புகளால் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அந்நகரங்களின் மக்கள் நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடையும் சூழல் உருவாகியுள்ளது.

இத்துடன், அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்குள் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக, ஜப்பானின் வானிலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், நிலநடுக்கங்களால் ரயில்வே பாதைகள் சேதமடையக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புல்லட் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

Summary

It has been reported that a powerful earthquake struck Japan's central prefectures early this morning (Nov. 8).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.