சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சீனாவின் திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் - பிரதிப் படம்

Updated On :

சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், திபெத்தின் தெற்குப் பகுதியிலுள்ள நகு மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

மலைப்பகுதியில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகவும், அதன் மையத்திலிருந்து 5 கிமீ வரை நில அதிர்வு உணரப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

திபெத்திய தலைநகரான லாசாவிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

திபெத் பீடபூமி யுரேசிய மற்றும் இந்திய புவித்தட்டுகள் மோதும் நிலையிலான நிலப்பரப்புக்கு மேல் அமைந்துள்ளதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படும்.

Summary

A powerful earthquake has struck the Chinese-administered Tibet region today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.