என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் மேலும் ஒருவருடன் திருமணம் மீறிய உறவு?
என்விடியா நிறுவன ஊழியருடன் ஜென்சன் ஹுவாங் திருமணம் மீறிய உறவில் இருந்தது குறித்து...

ஜென்சன் ஹுவாங் - கோப்புப் படம்
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், மேலும் மற்றொரு பெண்ணுடனும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜென்சன் ஹுவாங், அமெரிக்காவைச் சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்து வந்தார். இவர், சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட் இன்டா்நேஷனல்’ நிறுவனத்தின் முன்னாள் உயா் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங்குடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை அண்மையில் ஒப்புக்கொண்டாா்.
இதனிடையே, சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதைத் தொடா்ந்து, என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், ஆலிஸ் ஹுவாங் சீன அரசுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தனக்குக் கீழ் பணியாற்றும் என்விடியா நிறுவன அதிகாரி ஒருவருடனும் ஜென்சன் ஹுவாங் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்த கேள்விக்கு என்விடியா நிறுவனமும் ஜென்சன் ஹுவாங்கும் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
Summary
Nvidia former CEO Jensen Huang had a ‘third affair’ with another employee
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


