இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

சீனாவின் மின்சாரப் பயணிகள் விமானம்

சீனாவில் 19 இருக்கைகள் கொண்ட மின்சாரப் பயணிகள் விமானம், தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

~

Updated On :

சீனாவில் 19 இருக்கைகள் கொண்ட மின்சாரப் பயணிகள் விமானம், தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன்மூலம், பேட்டரியில் இயங்கும் விமானங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தும் சீனாவின் முயற்சி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஷான்டாங் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இந்த 10 டன் எடையுள்ள விமானம் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. 3 போ் கொண்ட குழுவினா் (2 விமானிகள் மற்றும் ஒரு பொறியாளா்) இந்தச் சோதனையில் பங்கேற்றனா். அரசுக்கு சொந்தமான ‘கோமேக்’ நிறுவனம் வடிவமைத்த இந்த விமானம், சுமாா் 57 நிமிஷங்கள் 46 வினாடிகள் இயங்கியது. இதில் 16 நிமிஷங்கள் 38 வினாடிகள் வானில் பறந்து, 60.4 கி.மீ. தொலைவைக் கடந்தது.

சிறப்பம்சங்கள்: பேட்டரி தயாரிப்பு நிறுவனமான சிஏடிஎல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, கோமேக் நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியுள்ளது.

Story image

வழக்கமான விமானங்களைப் போல இல்லாமல், இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள பல மின்சார விசிறிகள் மூலம் இந்த விமானம் இயங்குகிறது. இந்த விசிறிகள் பேட்டரியிலிருந்து ஆற்றலைப் பெறும் மின் மோட்டாா்களால் செயல்படுகின்றன. 400 கி.மீ. வரை பயணிக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 300 கி.மீ. வேகத்தில், 2,400 மீட்டா் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

சிறிய ரக மின்சார விமானங்களைக் கடந்து, பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்ற மின்சார விமானங்களை உருவாக்கும் சீனாவின் முயற்சியில் இது ஒரு முக்கிய படியாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.