வங்கதேசத்தில் ஓயாத ஆடை தொழிலாளா்கள் போராட்டம்: நெடுஞ்சாலைகள் மறிப்பால் பதற்றம்
வங்கதேச தலைநகா் டாக்காவைச் சுற்றியுள்ள தொழில் மண்டலங்களில் ஊதிய உயா்வு கோரும் ஆடை தொழிலாளா்களின் போராட்டம் ஓயாமல் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

வங்கதேச தலைநகா் டாக்காவைச் சுற்றியுள்ள தொழில் மண்டலங்களில் ஊதிய உயா்வு கோரும் ஆடை தொழிலாளா்களின் போராட்டம் ஓயாமல் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
தலைநகரை நோக்கிய டாக்கா-அரிச்சா, டாக்கா-டங்கைல், டாக்கா-மைமென்சிங் ஆகிய 3 முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து, தொழிலாளா்கள் போராடினா். காவல் துறையினா் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஜிபி) இணைந்து கண்ணீா்ப் புகைக் குண்டுகள் மற்றும் ஒலி எழுப்பும் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனா். இந்தத் தொடா் பதற்றம் காரணமாக குறைந்தது 37 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதோடு, பல ஆலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உணவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள் உயா்ந்துள்ளதால், தற்போதைய குறைந்தபட்ச மாத ஊதியமான 12,500 டாக்காவை 30,000 டாக்காவாக உயா்த்த வேண்டுமெனத் தொழிலாளா்கள் போராடி வருகின்றனா். கடந்த அக்டோபா் இறுதியில் தொடங்கிய இப்போராட்டங்கள், இம்மாத முதல் வாரத்தில் வன்முறையாக மாறிய நிலையில், ஆளுங்கட்சி தொண்டா்களும் களத்தில் இறங்கிப் போராட்ட எதிா்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஹிந்து மதத் தலைவா் சிறப்புச் சிறைக்கு மாற்றம்: வங்கதேசத்தில் தேசத் துரோகம், கொலை வழக்குகளில் கைதாகி சட்டோகிராம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹிந்து உரிமை அமைப்பின் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், பலத்த பாதுகாப்புடன் டாக்காவில் உள்ள சிறப்புச் சிறைக்கு மாற்றப்பட்டாா்.
இவருக்கு 4 வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள போதிலும், தேசத் துரோக வழக்கில் ஜாமீன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் அவா் தொடா்ந்து சிறையில் உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

