சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

பெருவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு

பெருவின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குறித்து...

Earthquake

நிலநடுக்கம் - DPS

Updated On :

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவின் மத்திய பகுதியில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் சனிக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் இல்லை.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தென் அமெரிக்க நாடான பெருவின் மத்திய பகுதியில் உள்ள ஆண்டிஸ் மலைப்பகுதியில், ஜூனின் நகருக்கு வடக்கே 34 கிலோமீட்டர் தொலைவில், 108 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை காலை 7.09 மணிக்கு(இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 அலகுகளாகப் பதிவானது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

பெருவின் தலைநகரிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு ஓடி வந்தனர்.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’என்றழைக்கப்படும் அபாயப் பகுதியில் பெரு அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இந்த பகுதியிலேயே ஏற்படுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம், பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இருவர் காயமடைந்தனர்; மேலும் பல வீடுகள், சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் சேதமடைந்தன. அதேபோல், ஜூலை மாதம் ஜூனின் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

A magnitude 6.9 earthquake shook the Andes in central Peru on Friday with no immediate reports of damage or casualties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.