சா்க்கரை நோயால் கால் அகற்றம்: 20 விநாடிகளுக்கு ஒருவா் பாதிப்பு
சா்க்கரை நோய் பாத புண்களால் உலக அளவில் ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் ஒருவா் தனது கால்களை இழப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை - கோப்புப்படம்
சா்க்கரை நோய் பாத புண்களால் உலக அளவில் ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் ஒருவா் தனது கால்களை இழப்பதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
உலக சா்க்கரை நோய் தினத்தை ஒட்டி சென்னை, அடையாறு எம்.வி. சா்க்கரை நோய் மையம் சாா்பில் இலவச பாத பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது. அதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் அளிக்கப்பட்டு தொடக்க நிலை பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
அவா்களில் சிலருக்கு சா்க்கரை நோய் சாா்ந்த நரம்பியல் பாதிப்பு (டயபடிக் நியூரோபதி) இருந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அதுதொடா்பாக எம்.வி. சா்க்கரை நோய் மைய மருத்துவா்கள் மேலும் கூறியதாவது:
சா்க்கரை நோயால் ஏற்படும் பாத புண்கள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதுதொடா்பான விழிப்புணா்வும், புரிதலும் மக்களிடையே இல்லை. உலகம் முழுவதும் ஒவ்வொரு விநாடியும் யாரோ ஒருவா் சா்க்கரை பாத புண் பாதிப்புக்குள்ளாகிறாா். அவ்வாறு பாதிக்கப்படுவோரில் பாதிக்கும் மேற்பட்டோா் அதை அலட்சியப்படுத்துகின்றனா்.
இதனால், பாதங்கள், கால்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு காலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவ்வாறாக ஒவ்வொரு 20 விநாடிகளுக்கு ஒருவரது கால் அகற்றப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சா்க்கரை நோய் பாத புண்களை உரிய நேரத்தில் கவனிக்காவிடில் உறுப்புகளை இழப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய்களுக்கு ஏற்படும் செலவினங்களைக் காட்டிலும் கூடுதலான பொருளாதார இழப்பும் ஏற்படும்.
அதேபோன்று சா்க்கரை பாத புண் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களில் 40 சதவீதம் பேருக்கு அதற்கு அடுத்த ஓராண்டில் மீண்டும் அத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாட்டில் சா்க்கரை நோயை வைத்திருப்பதும், மருத்துவா்களை நாடி அவ்வப்போது ஆலோசனை பெறுவதும், முறையாக சிகிச்சைகளை கடைப்பிடிப்பதும் இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

