ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம்! வளைகுடாவில் தாக்குதலைத் தீவிரமாக்கும் ஈரான்!

வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது குறித்து...

iran attacks gulf countries

ஈரான் தாக்குதல்... - கோப்புப் படம்

Updated On :

ஈரான் மீதான அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரானிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் இன்று (நவ. 22) ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. ஈரானின் வான்வழியில் அமெரிக்க ட்ரோன்கள் அத்துமீறுவதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு, ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் அரபு லீக் அமைப்பு ஆகியவைக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இத்துடன், கடந்த 7 நாள்களில் மட்டும் ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 25 எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலில் சிக்கியுள்ளன. இதனால், வளைகுடா நாடுகளின் எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் தவிர்த்து வந்த நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத் மீதான தாக்குதல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், பஹ்ரைனுக்கு ஆதரவாக ஏராளமான வளைகுடா நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானத்தை ஏவுகணைத் தாக்குதல் மூலம் சேதப்படுத்தியதாக, ஈரானிய படைகள் அறிவித்தன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க ராணுவம் வளைகுடாவில் இருக்கும் தங்களின் போர் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, அமெரிக்க தடைகள் மற்றும் கடற்படையின் முற்றுகை ஆகியவற்றுக்கு இடையே ஈரான் அமைதியான பொருளாதாரப் போரையும் எதிர்கொண்டு வருவதாக, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்திருந்த சூழலில் இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

ஈரானைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் தங்களின் எல்லைகளை மூடியதுடன், ஈரானிய துறைமுகங்களில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இதில், தாங்கள் முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரானிய அரசு இணங்கும் வரையில் இந்தப் பொருளாதாரத் தடைகள் அனைத்தும் தொடரும் என அமெரிக்க அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian forces are intensifying attacks on Gulf nations, following the economic sanctions imposed on Iran by the U.S. government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.