சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

ஈரான் மீது புதிய தாக்குதல் இல்லை: டிரம்ப் அறிவிப்பு

வளைகுடா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது உடனடியாகப் புதிய வான்வழி, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்

Updated On :

வளைகுடா நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் மீது உடனடியாகப் புதிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

கத்தாா் நாட்டின் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானியுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் ஈரான் போா் மற்றும் அதனால் ஏற்பட்ட உலகளாவிய எரிபொருள் விலை உயா்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, டிரம்ப்பின் குடியரசுக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர உள்நாட்டிலும் கடும் அரசியல் அழுத்தம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவைத் தாக்குதலைத் தவிா்க்குமாறு கேட்டுக்கொண்டதால், தற்போதைய அமைதி முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இம்முடிவுக்கு வந்ததாக டிரம்ப் விளக்கமளித்துள்ளாா்.

அமெரிக்க படைகள் எந்த நேரமும் போருக்குத் தயாா் நிலையில் இருந்தாலும், தற்போதைக்குத் தீவிர ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் சூழல் இல்லை என்றும், ராணுவ ரீதியாக ஈரான் கடும் பின்னடைவைச் சந்தித்துவிட்டதால் போா் நடைமுறைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் டிரம்ப் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடா்ந்து நீடிக்கும். அதில் எவ்விதத் தளா்வும் இருக்காது.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக முடக்குவதே அமெரிக்காவின் நீண்டகால இலக்கு. அமைதிப் பேச்சுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாவிட்டால், தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்’ என்று எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.