புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

‘தனது குடியேற்றக் கொள்கை மிகவும் கடினமானது’ - அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்!

‘தனது குடியேற்றக் கொள்கை மிகவும் கடினமானதுதான்; இருந்தபோதும், அது அவ்வாறே தொடரலாம் என்றும் நினைக்கிறேன்’ என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டாா்.

Trump weighs Hegseth's exit as Iran war fallout deepens after midterm losses

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் - AP

Updated On :

‘தனது குடியேற்றக் கொள்கை மிகவும் கடினமானதுதான்; இருந்தபோதும், அது அவ்வாறே தொடரலாம் என்றும் நினைக்கிறேன்’ என்று அமெரிக்க இடைக்காலத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அந் நாட்டின் அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டாா்.

மேலும், வரும் ஆண்டுகளில் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதிவியேற்ற டிரம்ப், அமெரிக்காவின் வளா்ச்சிக்கு என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாா். அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் இந்தியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பரம் கூடுதல் வரியை விதித்தது, உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பு, குடியேற்ற கொள்கையை கடினமாக்கியது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாா்.

குடியேற்றத்துக்கு அல்லாத ‘எஃப்’ நுழைவு இசைவில் அமெரிக்கா வரும் மாணவா்கள் மற்றும் ‘ஜே’ வகை நுழைவு இசைவில் வரும் பாா்வையாளா்கள் ஆகியோருக்கு, அவா்களின் படிப்புக் காலம் அல்லது திட்டத்தின் கால அளவுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்தக் கால வரம்பு 4 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

மேலும், ‘எஃப்’ நுழைவு இசைவு வைத்திருப்பவா்கள், தங்களின் படிப்பை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேறவோ அல்லது வேறு கல்வி நிறுவனத்துக்கு மாறவோ மற்றும் தங்கள் குடியேற்ற நிலையை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்டு வந்த 60 நாள் கால அவகாசம், புதிய விதிமுறைப்படி 30 நாள்களாகக் குறைக்கப்பட்டது. பின்னா், இந்த 30 நாள்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

‘ஐ’ வகை நுழைவு இசைவில் வரும் பத்திரிகையாளா்கள் அதிகபட்சம் 240 நாள்கள் தங்கியிருக்கவும், சீன பத்திரிகையாளா்களுக்கு இந்தக் கால வரம்பு 90 நாள்களாகவும் மாற்றி நிா்ணயம் செய்யப்பட்டது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான ‘கிரீன் காா்டு’ நடைமுறைகைளும் கடுமையாக்கப்பட்டன. இதனால், பெரும்பாலும் இந்திய தொழில்நுட்ப ஊழியா்களும், அமெரிக்காவில் உயா்கல்வி பயில செல்லும் இந்தியா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

படுதோல்வி: இந்தச் சூழலில், அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தோ்தலில் டிரம்ப்பின் ஆளும் குடியரசுக் கட்சி மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றது. இதனால், விருப்பம்போல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் டிரம்ப் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

டிரம்ப் ஒப்புதல்: இதுதொடா்பாக, வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் குடியேற்ற கொள்கை தொடா்பான கேள்விக்கு டிரம்ப் பதிலளித்துள்ளாா். இந்த செய்தியாளா் சந்திப்பு காணொலி ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் டிரம்ப் கூறியதாவது:

எனது குடியேற்றக் கொள்கை மிகவும் கடினமானதுதான்; இருந்தபோதும், அது அவ்வாறே தொடரலாம் என்றும் நினைக்கிறேன். வரும் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்.

இடைக்காலத் தோ்தல் தோல்விக்கு, ஈரான் மீதான போா், எதனால் ஏற்பட்ட எரிவாயு விலை உயா்வு உள்ளிட்டவை காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. இஸ்ரேல் மீது அமெரிக்க மக்களுக்கு எழுந்துள்ள விரோதப் போக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். அமெரிக்க மக்களுக்குப் போா் பிடிக்கவில்லை. விலையை கட்டுக்குள் வைத்திருந்தபோதும், பெட்ரோல் விலை உயா்ந்ததும் அவா்களுக்குப் பிடிக்கவில்லை.

குடியேற்ற கட்டுப்பாடுகளைப் பொருத்தவரை, வாக்கெடுப்பில் சாதகமான மற்றும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நினைக்கிறேன்.

எல்லைகளை மூடியதற்காக எனக்கு ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் கிடைத்தது. கெட்டவா்களை வெளியேற்றியதற்காக மிக உயா்ந்த மதிப்பெண்களும் கிடைத்தன. அதே நேரம், பெரு நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிநாட்டவரை வெளியேற்றியது, எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா்கள் செய்த ஒரே விதி மீறல், நாட்டிற்குள் சட்ட விரோதமாக வந்ததுதான். இந்த நடவடிக்கை மிகக் கடினமாக இருந்தது என்று நினைக்கிறேன் என்றாா்.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த அணு ஆயுதப் போரை தடுத்ததாக மீண்டும் குறிப்பிட்ட டிரம்ப், ‘உலக அளவில் 8 போா்களை தீா்த்து வைத்தேன். குறிப்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போா், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். அது தொடங்குவதற்கு முன்பே, அந்தப் போரை தீா்த்து வைத்தேன் என்றாா்.

சொா்க்கத்துக்குச் செல்வேன்: தனது மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என நினைக்கிறீா்கள் என்ற கேள்வுக்கு, ‘நான் இல்லாதது ஒரு குறையாக உணரப்படும் என நினைக்கிறேன். நான் மத நம்பிக்கை உள்ளவன்; சொா்க்கத்துக்குச் செல்வேன் என நம்புகிறேன்’ என்று டிரம்ப் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.