ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கமேனி, 120 பள்ளிக் குழந்தைகள் படுகொலை சம்பவம்! அமெரிக்க, ஐரோப்பிய நீதிமன்றங்களில் ஈரான் வழக்கு!

மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் ஈரான் வழக்குத் தொடுத்துள்ளது குறித்து...

மினாப் பள்ளி தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதிச்சடங்கு - கோப்புப் படம்

Updated On :

அமெரிக்க தாக்குதல்களில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி படுகொலை மற்றும் மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் மீது கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் தலைமை மதகுரு கமேனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீதும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் 120 பள்ளிக் குழந்தைகள் உள்பட 178 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், போர்க்குற்றங்கள் எனக் குற்றஞ்சாட்டப்படும் இந்தச் சம்பவங்களுக்கு குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் ஈரானிய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரானின் சட்டவிவகாரத் துறை துணைத் தலைவர் மஜீத் அன்சாரி கூறியுள்ளார்.

இந்த வழக்குகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவற்றில் சில வழக்குகள் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டன, மற்றவை பதிவு செய்யும் செயல்பாட்டில் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகக் கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தின.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த இந்தப் போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றவே அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has announced that it has filed lawsuits in American and European courts regarding the killing of Khamenei in a U.S. attack, as well as an attack on a school in Minab.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.