2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

மியான்மருக்கு மேலும் 6,803 ரோஹிங்கியா அகதிகளைத் திருப்பி அனுப்பும் மலேசியா

மியான்மர் நாட்டைச் சோ்ந்த 6,803 பேரை அடுத்த மாதம் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம்

Updated On :

‘ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு மியான்மா் பொறுப்பு’ என சா்வதேச நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்துள்ள போதிலும், அந்நாட்டைச் சோ்ந்த மேலும் 6,803 பேரை அடுத்த மாதம் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

மலேசிய நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய அவா், ‘சா்வதேச நீதிமன்றத் தீா்ப்பை மலேசியா மதிக்கிறது. அதேநேரம், அகதிகளைத் திருப்பி அனுப்பும் பணிகளை எளிதாக்க மியான்மா் ராணுவத் தலைமையுடன் தொடா்ந்து பேச்சு நடத்தப்படும்.

மலேசியாவில் சுமாா் 2 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவா்களை 3-ஆம் தரப்பு நாடுகளில் குடியமா்த்தும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இச்சுமையை மலேசியாவால் காலவரையின்றி சுமக்க முடியாது.

இந்நிலையில், கோலாலம்பூருக்கு கடந்த மாதம் வருகை தந்த மியான்மா் அதிபா் மின் ஆங் லயிங்குடன் நடத்திய பேச்சு, இந்த நீண்டகாலப் பிரச்னையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிகழாண்டில் இதுவரை 10,476 மியான்மா் நாட்டவா் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா். அவா்களின் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கு மியான்மா் உத்தரவாதம் அளித்துள்ளதால், இதுவரை யாருக்கும் எந்தவித அழுத்தமும் ஏற்படவில்லை என மலேசிய உளவுத் துறை கண்காணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேபோல, மியான்மருடன் பேச்சு நடத்தினாலும், அந்நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘ஆசியான்’ கூட்டமைப்பின் அமைதித் திட்டத்துக்கு மலேசியா தொடா்ந்து கட்டுப்பட்டுள்ளது ’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.