வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

10,000 ரோஹிங்கியா மக்களைக் கொன்ற மியான்மர் படைகள்! - சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு!

மியான்மர் படைகள் 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களைக் கொன்றதாக சர்வதேச நீதிமன்றம் அறிவிப்பு...

Myanmar forces killed 'thousands of Rohingya

ரோஹிங்கியா மக்கள்... - AP

Updated On :

மியான்மரின் ராணுவப் படைகள் கடந்த 2017 ஆம் ஆண்டு 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களைக் கொன்றதற்கான ஆதாரம் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவப் படைகள் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மியான்மரின் முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறுபான்மை சமூகத்தினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் குறித்து இன்று (நவ. 19) நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணைக் குறித்து நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா கூறுகையில்,

“மியான்மர் படைகள் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களைக் கொன்று, பாலியல் வன்முறைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான வன்முறைகள் மேற்கொண்டதையும், தப்பியோடிய ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மியான்மர் அரசு இனப்படுகொலை செய்தவதாகக் குற்றஞ்சாட்டி அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி, கடந்த 2019 ஆம் ஆண்டு காம்பியா நாட்டின் அரசு நீதிமன்ற விசாரணையை முன்மொழிந்தது.

இதையடுத்து, மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடவடிக்கை மேற்கொண்டதா என்பது குறித்த விசாரணையை சர்வதேச நீதிமன்றம் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The United Nations' International Court of Justice has stated that there is evidence that Myanmar's military forces have killed more than 10,000 Rohingya people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.