பாகிஸ்தானில் மெக்கா கூட்டணியின் உயர்நிலைக் கூட்டம்! சௌதி, துருக்கி தலைவர்கள் பங்கேற்பு!
மெக்கா கூட்டணியின் உயர்நிலைக் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெறுவது குறித்து...

மெக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி, சௌதி மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள்... - AP | கோப்புப் படம்
பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மெக்கா பாதுகாப்புக் கூட்டணியின் உயர்நிலைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
மெக்கா பாதுகாப்புக் கூட்டணியின் 2 நாள் கூட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இன்று (நவ. 27) தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில், துருக்கி மற்றும் சௌதி அரேபியா அரசுகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
யேமனில் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும், சௌதி அரேபியாவின் ஆதரவுபெற்ற அரசுப்படைகளுக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, யேமன் உள்நாட்டு மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் மீதான மெக்கா கூட்டணியின் நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில், முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் நடைபெறும் இந்தக் கூட்டத்தை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், மக்கள் நடமாட சிறப்புக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தான், சௌதி மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
முன்னதாக, பாகிஸ்தான், சௌதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் அரசுகள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் “மெக்கா பாதுகாப்பு” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
A high-level meeting of the Mecca security alliance comprising Pakistan, Saudi Arabia, and Turkey has begun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


