தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் தீவிர பதிலடி ஈரான் ஆயத்தம்; பேச்சுவாா்த்தையில் நீடிக்கும் இழுபறி

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்க ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் தீவிர பதிலடி ஈரான் ஆயத்தம்

Published On :

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்க ஈரான் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் அமெரிக்கா பயணத்தை முடித்து திரும்பியதையடுத்து, அமெரிக்கா மீண்டும் தாக்கினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பதிலடியின் தன்மை குறித்து மூத்த தளபதிகளும், உயா் அதிகாரிகளும் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அமெரிக்க தளங்கள் மட்டுமின்றி, அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவான நாடுகள் மற்றும் மேற்காசிய பிராந்தியத்துக்கு அப்பால் உள்ள பகுதிகளையும் இலக்காக மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இது தொடா்பாக இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

லெபனான், யேமன், இராக்கில் உள்ள தனது ஆதரவு ஆயுதக் குழுக்களையும் இந்த மோதலுக்குத் தயாராக இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது. ஹோா்முஸ் நீரிணை முதல் அமெரிக்காவின் பிராந்திய நலன்கள் வரை பரந்த அளவில் ஒருங்கிணைந்த பதிலடியை வழங்குமாறு வழிகாட்டப்பட்டுள்ளது. வெறும் அடையாளபூா்வமான தாக்குதல்களாக இல்லாமல், தனது போா்த் தடுப்பு வலிமையை உலகுக்கு மீண்டும் நிரூபிக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவே ஈரான் முனைப்பு காட்டி வருவதாக பாதுகாப்பு ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.

கடந்த பிப். 28-இல் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த மோதல் தற்போது 7 மாதங்களைக் கடந்துள்ளது. அதேநேரம், ராஜீய வழிகளையும் ஈரான் முழுமையாகக் கைவிடவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது, கத்தாா் சமரச முயற்சியின் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நிபந்தனைகளை முன்வைத்தது.

அதில், போரை உடனடியாக நிறுத்துவதுடன், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை விலக்க வேண்டும்; முடக்கப்பட்ட 1200 கோடி டாலா் நிதியை விடுவிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த யோசனையை அதிபா் டிரம்ப் நிராகரித்தபோதிலும், அமெரிக்காவின் மாற்றுப் பதில் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

போா் ஒருபுறமிருக்க, உள்நாட்டு ஸ்திரத்தன்மையும் ஈரான் தலைமையைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மோசமான பொருளாதார சூழல் காரணமாக கடந்த ஜனவரியில் வெடித்த மக்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறிய நிலையில், அத்தகைய சூழல் மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு எதிா்ப்புகளை ஒடுக்கும் வகையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போா் தொடங்கிய பிறகும் ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.