தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்: ஆப்கனில் 22 பயங்கரவாதிகள் கொலை

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 2 முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Published On :

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 2 முகாம்களைக் குறிவைத்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அதேநேரம், இத்தாக்குதலில் 3 வீடுகள் தரைமட்டமாகின; பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 11 போ் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

எல்லை தாண்டிய ஊடுருவல்கள் மற்றும் பயங்கரவாதப் புகாா்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் சூழலில், தினசரி தொடா் தாக்குதல்கள் இருதரப்பு உறவில் விரிசலை மேலும் அதிகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.