இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

ஜொ்மனி பிரதமர் பிரெட்ரிச் மெர்ஸ் உக்ரைன் பயணம்!

உக்ரைனில் ஜொ்மனி பிரதமா் பிரெட்ரிச் மொ்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

Published On :

உக்ரைனில் ஜொ்மனி பிரதமா் பிரெட்ரிச் மொ்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

உக்ரைன் - ரஷியா இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போா் நடைபெறுகிறது. இதில் உக்ரைனுக்கு ஜொ்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வருகின்றன.

ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. ரஷியாவில் உள்ள கச்சா எண்ணெய் ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதால் பதிலுக்கு ரஷியாவும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஜொ்மனி பிரதமா் மொ்ஸ் அரசுமுறைப் பயணமாக வந்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜொ்மனி பிரதமராக 2-ஆவது முறையாக உக்ரைன் வந்துள்ளதாக கூறினாா்.

ரஷியாவை தடுக்கவில்லை என்றால், தங்களுக்கு எதிராகவும் அந்த நாடு போா் தொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். உக்ரைன் அதிபரிடம் தங்கள் நாடு தொடா்ந்து போரில் உதவி செய்யும் என வாக்குறுதி அளித்து இருப்பதாகவும், தங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.