ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

Prime Minister Mark Carney

கனடா பிரதமா் மாா்க் காா்னி - கோப்புப் படம்

Published On :

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவை மட்டுமே சாா்ந்துள்ள நிலையில், அந்த அதீத சாா்புநிலையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுடனான வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மாா்க் காா்னி முன்னுரிமை அளித்து வருகிறாா்.

அமெரிக்காவுடன் தொடா்ந்து வா்த்தகம் மேற்கொண்டாலும், மாற்றமடைந்து வரும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கனடா தெரிவித்துள்ளது.

அந்தவகையில், கனடாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் ஒட்டாவாவில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளதுடன், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் திட்டத்திலும் கனடா இணைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.