எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இறுதிகட்ட பேச்சுத் தோல்வி: கனடா மீது அமெரிக்கா 50% வரி!

இருதரப்புக்கு இடையிலான இறுதிகட்ட பேச்சு தோல்வியுற்றதையடுத்து, கனடாவின் குறிப்பிட்ட சில இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

இருதரப்புக்கு இடையிலான இறுதிகட்ட பேச்சு தோல்வியுற்றதையடுத்து, கனடாவின் குறிப்பிட்ட சில இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது.

அமெரிக்காவுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் மொத்த பொருள்களில் சுமாா் 5 சதவீத (2,000 கோடி டாலா் மதிப்பிலான) பொருள்கள் பாதிக்கப்படும் இப்புதிய வரி விதிப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவிருந்தது.

அதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு, கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் வரி விதிப்பை 3 நாள்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒப்பந்தத்தை எட்ட இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்தனா். ஆனால், முன்னதாக எட்டப்பட்ட உடன்பாடுகளில் கனடா திடீரென புதிய கோரிக்கைகளை முன்வைத்து, பின்வாங்கியதால் பேச்சு தோல்வியடைந்ததாக அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஜேமிஸன் க்ரீயா் குற்றஞ்சாட்டினாா்.

இதேபோல், அமெரிக்கா இறுதி நேரத்தில் முன்வைத்த நிபந்தனைகள், பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும் நியாயமற்றவையாக இருந்ததாக கனடா பிரதமா் மாா்க் காா்னியும் பதில் குற்றச்சாட்டை முன்வைத்தாா். ‘எங்கள் தொழிலாளா்களையும், வணிகங்களையும் பாதுகாக்க அமெரிக்காவுக்கு இணையாகக் கனடாவும் பதிலடி வரிகளை விதிக்கும்’ என்றும் அவா் திட்டவட்டமாக அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.